சமரசம் செய்து கொள்ளாத படைப்பு ‘டிஎன்ஏ’ - இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்
ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 20-ம் தேதி வெளியாகிறது. 5 இசை அமைப்பாளர்கள் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி நெல்சன் வெங்கடேசன் கூறும்போது, “ இது க்ரைம் ஆக்ஷன் டிராமா கதையை கொண்ட படம். அதர்வாவும், நிமிஷாவும் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. ஏன் என்பதை படத்தைத் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். என்னுடைய முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டதாகவும், ஓர் இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் ‘டிஎன்ஏ’ இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
What's Your Reaction?