சபரிமலை பக்தர்களுக்காக வனப்பாதைகள் சீரமைப்பு - கேரள வனத்துறை தீவிரம்
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சத்திரம் வனப்பாதையில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் விலங்குகளை ட்ரோன் மூலம் கண்காணித்து பக்தர்களை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

குமுளி: சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சத்திரம் வனப்பாதையில் உள்ள புதர்களை அகற்றும் பணியில் கேரள வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் விலங்குகளை ட்ரோன் மூலம் கண்காணித்து பக்தர்களை பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வரும் 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக 15-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட உள்ளது. தமிழக அளவில் சபரிமலைக்கான முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதன்வழியே தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் செல்வர். தேனி மாவட்ட எல்லையான குமுளியை அடைந்ததும் அங்கிருந்து சபரிமலைக்கு பல்வேறு வழித்தடங்கள் உள்ளன.
What's Your Reaction?