கெடு 15-ம் தேதி முடிய உள்ள நிலையில் இதுவரை 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. தாக்கல் செய்துள்ளனர்

கடந்த 2024-25 நிதியாண்டுக் கான வருமான வரிப் படிவம் (ஐ.டி) தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாக இருந்தது.

Sep 7, 2025 - 08:00
 0  5
கெடு 15-ம் தேதி முடிய உள்ள நிலையில் இதுவரை 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. தாக்கல் செய்துள்ளனர்

புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டுக் கான வருமான வரிப் படிவம் (ஐ.டி) தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. எனினும், இதற்கான இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற் பட்டதால் செப்டம்பர் 15-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படு வதாக வருமான வரித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த காலக்கெடு முடிய இன் னும் 8 நாட்களே உள்ள நிலை உயில், கடந்த 4-ம் தேதி நிலவரப் படி 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. படிவத்தை தாக்கல் செய் துள்ளனர். அதில் 4.33 கோடி பேர் மட்டுமே சரிபார்த்தல் (இ-வெரிபை) பணியை முடித் துள்ளனர். அதேநேரம், இது வரை 3.17 கோடி படிவங்களுக்கு மட்டுமே சரிபார்த்தல் பணியை வருமான வரித் துறை முடித்துள் ளது. மேலும் 3.17 கோடி பேர் வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow