‘கூலி’ அப்டேட்: ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம்!
ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். சென்னையில் ‘கூலி’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ரஜினியின் ‘கூலி’ படத்தில் ஒரு பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கிறார். சென்னையில் ‘கூலி’ படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, பிரம்மாண்டமாக பாடல் ஒன்றை படமாக்கியுள்ளது படக்குழு. இதில் ரஜினியுடன் நடனமாடி இருக்கிறார் பூஜா ஹெக்டே.
‘ஜெயிலர்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி, சில காட்சிகளில் நடித்திருந்தார் தமன்னா. அவர் நடனமாடிய ‘கவாலா’ பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கூலி’ படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடி இருக்கிறார். இதுவும் பெரும் வரவேற்பைப் பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.
What's Your Reaction?