குறும்புத்தனம் ஏதுமில்லாத கூரத்தாழ்வார் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 44

ராமானுஜரின் திருவருளைப் பெறுவதற்குத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆறாம் பாசுரத்தில் ஐயம் கொண்ட திருவரங்கத்தமுதனார், தனக்குத் தகுதி உண்டு என்று ஏழாம் பாசுரத்தில் பாடுகிறார்.

May 19, 2025 - 19:25
 0  3
குறும்புத்தனம் ஏதுமில்லாத கூரத்தாழ்வார் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 44

ராமானுஜரின் திருவருளைப் பெறுவதற்குத் தனக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆறாம் பாசுரத்தில் ஐயம் கொண்ட திருவரங்கத்தமுதனார், தனக்குத் தகுதி உண்டு என்று ஏழாம் பாசுரத்தில் பாடுகிறார். ராமானுஜரின் சீடராகிய கூரத்தாழ்வாரின் சீடன் நான் என்ற ஒற்றைத் தகுதியே போதுமானது என்று அந்தப் பாசுரத்தில் கூறுகிறார். “மொழியைக் கடக்கும் பெரும் புகழான்” என்று இந்தப் பாசுரம் தொடங்குகிறது. கூரத்தாழ்வாரின் வரலாற்றைக் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் தான் இந்த வரியின் மகத்துவம் புரியும்.

பெரும் செல்வந்தராய் இருந்தபோதும் வைணவத்திற்குத் தொண்டாற்றுவதற்காகப் பொன்னையும் பொருளையும் துறந்து ராமானுஜரின் பரம சீடர் ஆனவர் கூரத்தாழ்வார். கூரம் என்பது அவர் பிறந்த ஊர். ராமானுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீ பாஷ்யம் என்னும் உரையை எழுத பக்கபலமாய் இருந்தவர் இந்தக் கூரேசர் தான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow