குமரி - மீனச்சல் கோயிலில் மூலிகை இலைகளால் வரைந்த களமெழுத்துப் பாட்டு ஓவியம்: பக்தர்கள் ஆர்வம்
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளி ல் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்

நாகர்கோவில்: யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள மூலிகை இலைகளில் பொடி செய்து வரையும் களமெழுத்துப் பாட்டு, ஓவியம் குமரி - கேரள எல்லையான மீனச்சல் கிராமம் பத்ர காளியம்மன் கோயிலில் வரையப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
களமெழுத்துப் பாட்டு என்பது கேரளாவில் பாரம்பரியமான ஒரு வழிப்பாட்டு கலை வடிவம். இதில், தரை தளத்தில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட வண்ணப் பொடிகளால் வரைந்து, அதைப் பாடியும், நடனமாடியும் வழிபடுகிறார்கள். பத்ரகாளி அம்மன், அய்யப்பன், வேட்டக்கொருமகன் போன்ற தெய்வங்களுக்காக இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.
What's Your Reaction?