கால்நடைகளுக்கு அருள்பாலிக்கும் கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

டாத்தலை கொண்ட அசுரன், வேர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, அம்பாள் கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்டு, அசுரனின் தலையை வெட்டினாள்

Sep 7, 2025 - 07:50
 0  3
கால்நடைகளுக்கு அருள்பாலிக்கும் கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் | ஞாயிறு தரிசனம்

மூலவர்: துர்காபுரீஸ்வரர் அம்பாள்: காமுகாம்பாள் தல வரலாறு : கிடாத்தலை கொண்ட அசுரன், வேர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, அம்பாள் கடும் கோபத்துடன் போருக்குப் புறப்பட்டு, அசுரனின் தலையை வெட்டினாள். அது பூலோகத்தில் விழுந்த இடமே கிடாத்தலைமேடு. ஓர் உயிரைக் கொன்ற பழிதீர, அம்பாள் பூலோகத்துக்கு வந்து சிவபூஜை செய்தாள். பின்னர் இந்த லிங்கத்துக்கு துர்காபுரீஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது.

கோயில் சிறப்பு: அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதற்காக தியானத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டியதால், மன்மதன், சிவன் மீது மலர்க்கணை தொடுத்தான். கோபம் கொண்ட சிவன் அவனை சாம்பலாக்கினார். பின்னர், ரதிமீது இரக்கம் கொண்டு அவன் அவளது கண்களுக்கு மட்டும் தெரியும்படி வரம் அளித்தார். அம்பிகை அவனுக்கு கரும்பு வில்லையும், மலர்க்கணைகளையும் திரும்ப அளித்தாள். காமனாகிய மன்மதனுக்கு அருள்புரிந்ததால் காமுகாம்பாள் என்று பெயர் பெற்று, அம்பாள் இத்தலத்தில் குடியிருக்கிறாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow