காலவரையற்ற வேலை நிறுத்தமா? - கேரள தயாரிப்பாளர்கள் மோதல்

நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது

Feb 15, 2025 - 01:55
 0  3
காலவரையற்ற வேலை நிறுத்தமா? - கேரள தயாரிப்பாளர்கள் மோதல்

நடிகர்களின் சம்பளத்தைக் குறைக்க வலியுறுத்தி, ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று கேரள திரைப்படத் துறையினரின் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பேசிய கேரள தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் குமார் “ வரிகுறைப்பு தொடர்பாகப் பலமுறை வலியுறுத்தியும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்களின் சம்பளம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும்போது, 10 சதவிகிதம் கூட தியேட்டரில் வசூல் ஆவதில்லை. இதற்கு ஒரு முடிவை எட்ட ஜூன் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருக்கிறோம்” என்று கூறினார்.

இதற்கு மலையாள சினிமா வில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மோகன்லால் நடிக்கும் படங்களை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கும் அந்தோணி பெரும்பாவூர் கூறும்போது, “இந்தவேலைநிறுத்தம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எதற்கும் வேலைநிறுத்தம் சரியான முடிவாக இருக்காது. தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, இந்த முடிவை எடுக்க சுரேஷ்குமாருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார். இவரைப் போல நடிகர் விநாயகன் உட்பட வேறு சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow