‘இதயம் முரளி’ மூலம் இயக்குநர் ஆனார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்

தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, சிலம்பரசனின் 49-வது படம் ஆகியவற்றைத் தனது டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன்

Feb 15, 2025 - 01:55
 0  3
‘இதயம் முரளி’ மூலம் இயக்குநர் ஆனார் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்

தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, சிலம்பரசனின் 49-வது படம் ஆகியவற்றைத் தனது டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன். இவர் அடுத்து தயாரித்து, இயக்கும் படத்துக்கு ‘இதயம் முரளி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். பிரக்யா நாக்ரா, ரக்‌ஷன், கயாது லோஹர், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், ஏஞ்சலினா, ஜோனிதா காந்தி, இசை அமைப்பாளர் தமன், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன் என பலர் நடிக்கின்றனர். சாய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரமணகிரிவாசன், ஆகாஷ் பாஸ்கரன், திராவிடச் செல்வம் ஆகியோர் வசனம் எழுதுகின்றனர். இதன் டைட்டில் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow