காலம் மறந்த அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ்

இருந்தபோதும், இறந்த பின்னும் பலராலும் பல காலம் கண்டுகொள்ளப்படாமல்போன எல்லப்பிரகதா சுப்பாராவ் (Yellapragada Subbarow) பற்றி இன்றைய அறிவியல் உலகில் அறிந்தோர் மிகச் சிலரே.

Mar 3, 2025 - 20:00
 0  3
காலம் மறந்த அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ்

அறிவியலில் நோபல் பரிசு கிடைப்பது அரிது. சிறந்த கண்டறிதல்களுக்குச் சில நேரத்தில் கிடைக்காமல் போவதும் உண்டு. ஒருவரின் பல கண்டறிதல்களுக்குப் பலமுறை கிடைக்க வேண்டிய நோபல் பரிசு ஒவ்வொரு முறையும் கிடைக்காமல் போனால்?

ஆங்கிலேயர் ஆட்சியில் மதராஸ் மாகாண கோதாவரி டெல்டாவின் பீமாவரத்தில் பிறந்து, 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒருவர், நம்மில் பலர் அவரைவிடவும் நீண்ட காலம் வாழ அடிகோலினார். இருந்தபோதும், இறந்த பின்னும் பலராலும் பல காலம் கண்டுகொள்ளப்படாமல்போன எல்லப்பிரகதா சுப்பாராவ் (Yellapragada Subbarow) பற்றி இன்றைய அறிவியல் உலகில் அறிந்தோர் மிகச் சிலரே. கோதாவரி ஆற்றங்கரையில் பிறந்து, கூவம் ஆற்றங்கரையில் கல்வி பயின்று, அமெரிக்க பாஸ்டன் நகரின் சார்லஸ் ஆற்றங்கரையில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்தியவர் சுப்பாராவ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow