என்றும் பசுமை மாறாத வேளாண் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 22
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, அக்ரிகல்சுரல் இன்ஜினீயரிங் ஆகிய பாடப் பிரிவுகளில் இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம்.

வேளாண் துறையில் தகுதி வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின்கீழ் கோவை, மதுரை, கிள்ளிக்குளம் (தூத்துக்குடி), நவலூர் குட்டப்பட்டு (திருச்சி), குமுளூர் (திருச்சி), திருவண்ணாமலை, குடுமியான் மலை (புதுக்கோட்டை), ஈச்சன்கோட்டை (தஞ்சாவூர்), செட்டிநாடு (சிவகங்கை), கீழ்வேளூர் (நாகப்பட்டினம்), பையூர் (கிருஷ்ணகிரி), கரூர் ஆகிய இடங்களில் வேளாண் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேட்டுப் பாளையத்தில் வனவியல் கல்லூரி உள்ளது.
என்ன படிக்கலாம்? - வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல் (ஃபாரஸ்ட்ரி), செரிகல்சர், ஃபுட் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி (ஆனர்ஸ்), பி.டெக். பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பயோ டெக்னாலஜி ஆகிய நான்கு ஆண்டுப் படிப்புகளில் சேர விரும்புவோர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
What's Your Reaction?