காமராஜர் ஏன் மக்கள் தலைவர்?
தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் காமராஜர் முக்கிய மானவர். தனது நிர்வாகத்துக்காக மட்டுமல்லாமல், எளிய வாழ்வுக்காகவும் காமராஜர் இன்றளவும் அரசியல் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார்.

தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்களில் காமராஜர் முக்கிய மானவர். தனது நிர்வாகத்துக்காக மட்டுமல்லாமல், எளிய வாழ்வுக்காகவும் காமராஜர் இன்றளவும் அரசியல் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறார். எளிய குடும்பத்தில் பிறந்த காமராஜர், பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்றாலும், சிறு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
கல்விக் கூடங்களுக்குச் செல்லவில்லை என்றாலும், தன்னைத் தானே வளர்த்துக்கொண்டவர் காமராஜர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தவர். தொடர்ச்சியான ஆர்வத்தில் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். கேரளத்தில் இருந்த குறைந்த நாட்களில் மலையாள மொழியைக் கற்ற காமராஜருக்கு தெலுங்கு மொழியும் தெரியும்.
What's Your Reaction?