காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர்நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

Jun 28, 2025 - 13:10
 0  4
காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

வாஷிங்டன்: காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

காங்கோ-ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நெருங்கிவிட்டதாக தான் நம்புவதாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்து வெள்ளை மாளிகையில் அவர் பேசுகையில், “இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன். சம்பந்தப்பட்ட சிலரிடம் நான் இப்போதுதான் பேசினேன். அடுத்த வாரத்துக்குள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார். ஆனால், போர் நிறுத்தம் குறித்து யாரிடம் பேசி வருகிறோம் என்ற தகவலை ட்ரம்ப் வெளியிடவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow