களத்தில் காயமடைந்த அக்சர் படேல்: பாகிஸ்தான் உடனான போட்டியில் விளையாடுவாரா?
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன.

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.21) பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் இரண்டாவது ஆட்டமாக இது அமைந்துள்ளது.
இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ஓமன் அணி உடனான லீக் ஆட்டத்தில், பீல்டிங் செய்த போது அவர் தலை பகுதியில் காயமடைந்தார். அதன் பின்னர் களத்தில் இருந்து அக்சர் படேல் பெவிலியன் திரும்பினார்.
What's Your Reaction?