இந்தியர்களுக்கு பேரிடி: எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 88,00,000 ரூபாய் ( 1 லட்சம் டாலர்) ஆக உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உத்தரவாக இது அமைந்துள்ளது.

Sep 20, 2025 - 12:35
 0  3
இந்தியர்களுக்கு பேரிடி: எச்1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தி ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாக்களுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக ( இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ) உயர்த்தும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் உத்தரவாக அமைந்துள்ளது.

இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow