கல்லூரி கதையில் சிலம்பரசன்!

நடிகர் சிலம்பரசன் தனது 42-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Feb 5, 2025 - 12:05
 0  5
கல்லூரி கதையில் சிலம்பரசன்!

நடிகர் சிலம்பரசன் தனது 42-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாயின.

அதன்படி மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தை அடுத்து சிம்புவின் 49-வது படத்தை ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இதை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் அறிவிப்பில் ‘தி மோஸ்ட் வாண்டட் ஸ்டூடன்ட்’ என டேக் லைன் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு கல்லூரியை பின்னணியாக கொண்ட கதையில் நடிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow