மார்ச்சில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு?

ரஜினிகாந்த் நடித்த, 'ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

Dec 22, 2024 - 10:20
 0  4
மார்ச்சில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு?

ரஜினிகாந்த் நடித்த, 'ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டன. தற்போது இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow