கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர். 

Mar 10, 2025 - 01:50
 0  4
கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

புதுடெல்லி: கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயி​லான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் சிலர் நேற்​று​முன்​தினம் தாக்​குதல் நடத்​தினர். இதில் கோயில் சேதம் அடைந்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சக இணை​யதளத்​தில் வெளி​யான பதி​வில் செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறும்​போது, “சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயில் மீது தாக்​குதல் நடந்​தது குறித்த தகவல்​களை அறிந்​தோம். கீழ்த்​தர​மான இது​போன்ற தாக்​குதல்​களை வன்​மை​யான சொற்​களால் கண்​டிக்​கிறோம். இதில் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று உள்​ளூர் அதி​காரி​களை வலி​யுறுத்தி உள்​ளோம். அத்​துடன் வழி​பாட்டு தலங்​களுக்கு போதிய பாது​காப்பு வழங்​கும்​படி​யும் கேட்​டுக் கொண்​டுள்​ளோம்” என்று கூறி​யுள்​ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow