கம்பட்ராயர் திருவிழா: கோத்தர் பழங்குடி மக்கள் ஆனந்த நடனம்
கோத்தகிரின பழங்குடி மக்கள் தங்கள் குல தெய்வமான கம்பட்ராயர் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

உதகை: கோத்தர் இன பழங்குடி மக்கள் தங்கள் குல தெய்வமான கம்பட்ராயர் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உட்பட்ட 7 ஊர்களில் வசிக்கின்றனர். குன்னூர் அருகே கொல்லிமலையில் கோத்தர் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனத்துடன் இரவு முழுவதும் கோவில் திருவிழா நடைபெற்றது. இவர்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் திருவிழாவான கம்பட்டராயர் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படுகிறது.
What's Your Reaction?