கந்தசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த திருப்போரூர்
திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் முக்கிய உற்சவமான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் முக்கிய உற்சவமான தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
காலை 7:00 மணியளவில் உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில், கோயிலிலிருந்து தேரடிக்கு `அரோகரா' கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் புறப்பட்டார்.
What's Your Reaction?