கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்

இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Aug 13, 2025 - 08:55
 0  4
கடல் உணவு பொருள் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தையை தேட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்ஜன் சிங் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறி​வித்​துள்ள நிலை​யில், அது இந்​திய கடல் உணவுப் பொருட்​கள் ஏற்​றும​தி​யில் கடும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில், புதிய சந்​தைகளை தேடு​மாறு ஏற்​றும​தி​யாளர்​களை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யுள்​ளது

இதுகுறித்து மத்​திய மீன்​வளம் மற்​றும் கால்​நடை பராமரிப்பு துறை அமைச்​சர் ராஜீவ் ரஞ்​ஜன் சிங், கடல் உணவு ஏற்றுமதியாளர்களு​டன் நடை​பெற்ற சந்​திப்​பின்​போது கூறிய​தாவது: தற்​போதைய சூழலை ஏற்​றும​தி​யாளர்​கள் தைரி​யத்​துடன் எதிர்​கொள்ள வேண்​டும். இந்​திய இறால் மற்​றும் பிற மீன் வகைகளுக்கு உலகள​வில் நல்ல வரவேற்பு உள்​ளது. இதனால், ஏராளமான மாற்று சந்தை வாய்ப்​பு​கள் உள்​ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow