கடந்த ஆண்டில் 268 ஐபிஓ-க்கள் வெளியீடு: ஆசிய அளவில் தேசிய பங்குச் சந்தை சாதனை!

கடந்த ஆண்டில் வணிக நிறுவனங்கள் 268 ஐபிஓ-க்களை (புதிய பங்கு வெளியீடு) தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மூலம் வெளியிட்டது.

Jan 3, 2025 - 22:25
 0  5
கடந்த ஆண்டில் 268 ஐபிஓ-க்கள் வெளியீடு: ஆசிய அளவில் தேசிய பங்குச் சந்தை சாதனை!

மும்பை: கடந்த ஆண்டில் வணிக நிறுவனங்கள் 268 ஐபிஓ-க்களை (புதிய பங்கு வெளியீடு) தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மூலம் வெளியிட்டது. இது ஒரே ஆண்டில் ஆசியாவிலேயே வெளியிடப்பட்ட அதிக எண்ணிக்கையிலான ஐபிஓ-க்கள் ஆகும்.

இதன் மூலம் ரூ.1.67 லட்சம் கோடி நிதியை நிறுவனங்கள் திரட்டியுள்ளன. கடந்த 2024-ல் மட்டும் தேசிய பங்குச் சந்தையின் மெயின்போர்டில் 90 மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தரப்பில் 178 ஐபிஓ பட்டியலிடப்பட்டது. இந்திய பங்குச் சந்தை செயல்பாடு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதை இது சுட்டிக்காட்டுவதாக வணிக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow