கச்சத்தீவில் துவங்கிய திருவிழா: இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Mar 14, 2025 - 20:45
 0  4
கச்சத்தீவில் துவங்கிய திருவிழா: இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பு

ராமேசுவரம்: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா, இலங்கையை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கொடியை ஏற்றினார். சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், ராமேசுவரம் வேர்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ, யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழப்பாணம் முதன்மை குரு அருட்தந்தை ஜோசப் தாஸ் ஜெபரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow