ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி இழப்பு: இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியும் காரணமும்!
ட்ரம்ப் தொடங்கிவைத்த வரி யுத்தம், பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை: ட்ரம்ப் தொடங்கிவைத்த வரி யுத்தம், பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தைகளிலும் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 2,226.79 புள்ளிகள் சரிந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விகிதங்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பு, உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது. அத்துடன், உலக வர்த்தகத்தையே உலுக்கி வருகிறது. அதேபோல், சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு பதிலடியாக வரி உயர்வை அறிவித்திருப்பது பொருளாதார போரை துவக்கி வைத்துள்ளது.
What's Your Reaction?