ஏர் இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வை-பை இணையதள சேவை

டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், புத்தாண்டு பரிசாக, சில குறிப்பிட்ட உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வை-பை இணையதள சேவையை வழங்குகிறது.

Jan 2, 2025 - 06:05
 0  5
ஏர் இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வை-பை இணையதள சேவை

புதுடெல்லி: ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் ஏ321 நியோ ஆகிய விமானங்களில் வை-பை இணையதள சேவை வழங்கப்படுகிறது. இதன்மூலம் உள்நாட்டு விமானங்களில் முதல்முறையாக இணையதள சேவையை வழங்கும் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

விமானம் 10 ஆயிரம் அடி உயரத்துக்கு மேல் பறக்கும்போது பயணிகள் தங்கள் லேப்டாப்கள், டேப்லட்கள், ஸ்மார்ட்போன்களில் இந்த வை-பை இணையதள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் லேப்டாப், ஸ்மார்ட்போன் என ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow