‘ஏஐ யுகத்திலும் கோடிங் கற்பது முக்கியம்’ - கூகுள் ஆராய்ச்சித் தலைவர்
டெவலப்பர்களுக்கு கோடிங் முக்கியத் திறன் என்றும், அதனால் அதை டெவலப்பர்கள் கற்பது அவசியம் என கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறைத் தலைவரான யோஸி மேஷாஸ் (Yossi Matias) தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: உலக அளவில் பல்வேறு துறைகளில் ஏஐ மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், டெவலப்பர்களுக்கு கோடிங் முக்கியத் திறன் என்றும், அதனால் அதை டெவலப்பர்கள் கற்பது அவசியம் என கூகுள் நிறுவனத்தின் ஆராய்ச்சி துறைத் தலைவரான யோஸி மேஷாஸ் (Yossi Matias) தெரிவித்துள்ளார்.
“புதிய தொழில்நுட்பங்கள் மென்பொருள் துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டு வரும் வழக்கமான பணிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கோடிங் பணிகளில் ஏஐ டூல்கள் உதவுகின்றன. ஆனால், கோடிங் திறனின் அடிப்படைக்கான மதிப்பு என்பது மாறாமல் உள்ளது. அதனால் அதனை கற்பது அவசியம்.
What's Your Reaction?