உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார்.  தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது. 

Aug 18, 2025 - 09:40
 0  4
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: வியாபாரிகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்​லி​யில் ரூ.11,000 கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்​கி வைத்​தார். அப்​போது பேசிய அவர், உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வியா​பாரி​கள் விற்​பனை செய்ய வேண்​டும் என்று அழைப்பு விடுத்​தார். தலைநகர் டெல்​லி​யின் சிவ​மூர்த்தி பகு​தி​யில் இருந்து ஹரி​யா​னா​வின் குரு​கி​ராம் வரை 29 கி.மீ. தொலை​வுக்கு புதிய நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டது.

இதில் ஹரி​யா​னா​வுக்கு உட்​பட்ட 19 கி.மீ. தொலைவு சாலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து டெல்லி எல்​லைக்கு உட்​பட்ட 10 கி.மீ. தொலைவு சாலை பணி ரூ.5,360 கோடி​யில் மேற்​கொள்​ளப்​பட்​டது. துவாரகா நெடுஞ்​சாலை என்​றழைக்​கப்​படும் இந்த சாலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று திறந்​து​வைத்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow