உயிர்ப்பன்மை மரபுத் தலமான எலத்தூர் குளம்

இங்கு  200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. இதில் 79 வலசை பறவை இனங்களும், 125 உள்ளூர்ப் பறவை இனங்களும் அடங்கும். இத்துடன் பல உயிரினங்கள் வாழும் சிறந்த உயிர்ச்சூழலை இந்தக் குளம் பெற்றுள்ளது.

Sep 3, 2025 - 18:10
 0  3
உயிர்ப்பன்மை மரபுத் தலமான எலத்தூர் குளம்

ஈரோடு மாவட்டம் எலத்தூர் குளத்தைத் தமிழ்நாட்டின் மூன்றாவது உயிர்ப்பன்மை மரபுத் தலமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி ஆகியவை உயிர்ப்பன்மை மரபுத் தலங்களாக உள்ளன. இலையுதிர் முட்புதர் காடு, கரைக்காடு, உலர் புல்வெளி, சதுப்பு நிலம், பாறைப் பகுதிகள் நிறைந்த நீர்வழித்தடம், ஆழமான நீர்நிலைப்பகுதி, ஆழம் குறைந்த நீர்ப்பகுதி, மண் - மணல் திட்டுகள், ஏரிக்கரை ஆகிய வாழிடங்கள் எலத்தூர் குளத்தில் உள்ளதால் இந்தக் குளம் பல்லுயிர் செறிவுமிக்க இடமாக விளங்குகிறது.

இதுவரை 693 வகையான உயிரினங்கள் எலத்தூர் குளத்தில் வாழ்வதாகச் சூழல் அறிவோம் குழு சார்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 204 பறவைகள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலூட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் அடங்கும். இங்கு 200க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்கின்றன. இதில் 79 வலசை பறவை இனங்களும், 125 உள்ளூர்ப் பறவை இனங்களும் அடங்கும். இத்துடன் பல உயிரினங்கள் வாழும் சிறந்த உயிர்ச்சூழலை இந்தக் குளம் பெற்றுள்ளது. 37 ஹெக்டேருக்கு மேல் உள்ள எலத்தூர் குளத்தில் 72 வகையான உள்ளூர்ப் பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow