‘உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி’ தமிழ் நூல்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று திருப்பதியில் வெளியிடுகிறார்

‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்கும் உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி தமிழ் நூலின் 2 தொகுதிகளை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூன் 10-ம் தேதி (இன்று) திருப்பதியில் வெளியிடுகிறார்.

Jun 10, 2025 - 08:15
 0  3
‘உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி’ தமிழ் நூல்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று திருப்பதியில் வெளியிடுகிறார்

சென்னை: ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்கும் உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி தமிழ் நூலின் 2 தொகுதிகளை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூன் 10-ம் தேதி (இன்று) திருப்பதியில் வெளியிடுகிறார்.

அனைவராலும் போற்றத் தக்க மதத் தலைவராக இருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாரத்தான் யாத்திரைகளின்போது அவரது செயல்பாடுகள், திட்டங்கள், அவரது முகாம்களில் நடைபெற்ற நிகழ்வுகள், சொற்பொழிவுகள், பல்வேறு இடங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ‘தி இந்து’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திகளைத் தொகுத்து ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில் ‘உண்மையின் அவதாரம்’ -காஞ்சி மகாஸ்வாமி என்ற நூல். 2 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். திருப்பதியில் ஜூன் 10-ம் தேதி (இன்று) வெளியிடுகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow