உணவு சுற்றுலா: தாவனாகிரி பென்ன தோசை:
‘பென்ன’ என்றால் கன்னடத்தில் வெண்ணெய் என்று பெயர்! வழக்கமான தோசையிலிருந்து மாறுபட்டு வெண்ணெய்யைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவதால் வெண்ணெய் (பென்ன) தோசை என்று பெயர் பெற்றிருக்கிறது.

தோசைப் பிடிக்காத மனிதர்கள் தென்னிந்தியாவில் மிக மிகக் குறைவு என்று சொல்லுமளவுக்கு தோசை ரகங்கள் நம்மை மதி மயக்கி வைத்திருக்கின்றன. கல் தோசையில் தொடங்கி, பேப்பர் ரோஸ்ட், பொடி தோசை, நீர் தோசை, கறி தோசை, மசால் தோசை, சிறுதானிய தோசை… என நீளும் தோசைப் பட்டியலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது சற்று கடினம் தான்!
இந்த நீண்ட பட்டியலில் கர்நாடகத்தில் புகழ்பெற்ற ‘பென்ன தோசையையும்’ சேர்த்துக்கொள்ளலாம். தாவனாகிரி (Davanagere) நகரத்தில் முதன் முதலாக இவ்வகையிலான தோசை தயாரிக்கப்பட்டு பிரபலமடைந்ததால் ‘தாவனாகிரி பென்ன தோசை’ என்றும் அழைக்கப்படுகிறது. தாவனாகிரி நகரம் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தில் எந்த உணவகத்துக்குச் சென்றாலும் பென்ன தோசையை ருசிக்கலாம். கர்நாடகத்தின் சிறப்பு உணவு வரிசையில் பென்ன தோசைக்கு முக்கிய இடமுண்டு.
What's Your Reaction?