உணவு சுற்றுலா: சுட்ட தேங்காய்

பண்டிகைக் காலச் சிறப்புச் சிற்றுண்டிகள் ஒவ்வோர் ஊரிலும் உண்டு. பாரம்பரியமாகத் திருவிழா நாள்களில் மட்டும் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் ஆண்டு முழுவதும் நினைவில் நிற்கும். 

Feb 5, 2025 - 14:35
 0  17
உணவு சுற்றுலா: சுட்ட தேங்காய்

பண்டிகைக் காலச் சிறப்புச் சிற்றுண்டிகள் ஒவ்வோர் ஊரிலும் உண்டு. பாரம்பரியமாகத் திருவிழா நாள்களில் மட்டும் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் ஆண்டு முழுவதும் நினைவில் நிற்கும். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் நாளில் கொண்டாடப்படும் ’தேங்காய் சுடும்’ பண்டிகையில் தயாராகும் ’சுட்ட தேங்காய்’ மருத்துவக் குணங்களில் மேன்மையானது. சுவையோ சுண்டி இழுக்கும் தன்மையுடையது. சேலம், கரூர் போன்ற ஊர்களில் கொண்டாடப்படும் தேங்காய்ப் பண்டிகையின் சாரத்தையும் ஊட்டத்தையும் அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆடி மாதம் முதல் நாள் சேலம் மாவட்டத்துக்குள் நுழைந்தால், சுட்ட தேங்காயின் வாசம் வீசுவதை உணரலாம். ‘தேங்காயப் பண்டிகை’ காரணமாகப் பள்ளிகளுக்கு அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்க, சுட்ட தேங்காய் தயாரிப்பதற்கான பணிகள் வெகு மும்முரமாக நடைபெறும். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட விழா இது! குடும்பங்கள் சூழ கூட்டம் கூட்டமாகத் தேங்காயைச் சுடும் நிகழ்வுகள் அரங்கேறும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow