உணவு ஆர்டரில் ரூ.103 டெலிவரி கட்டணமாக சேர்த்த ஸ்விக்கி: ரூ.35,453 அபராதம் விதித்த நீதிமன்றம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.35,453 அபராதம் விதித்துள்ளது தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம். 

Nov 11, 2024 - 15:59
 0  19
உணவு ஆர்டரில் ரூ.103 டெலிவரி கட்டணமாக சேர்த்த ஸ்விக்கி: ரூ.35,453 அபராதம் விதித்த நீதிமன்றம்

ஹைதராபாத்: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.35,453 அபராதம் விதித்துள்ளது தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

ஸ்விக்கி வாடிக்கையாளரான எம்மடி சுரேஷ் பாபு என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். அதில் குறிப்பிட்ட தூரம் வரை டெலிவரியை உறுதி செய்யும் ‘ஸ்விக்கி ஒன் மெம்பர்ஷிப்’ சந்தாவை செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.107 டெலிவரி கட்டணமாக வசூல் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow