உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: 21 பேர் உயிரிழப்பு, 80 பேர் காயம்!
வடக்கு உக்ரைன் நகரமான சுமியின் மீது ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கீவ்: வடக்கு உக்ரைன் நகரமான சுமியின் மீது ஞாயிற்றுக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 80க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட மோசமான இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் எதிர்வினையைக் கோரியுள்ளார். தரையில் கிடக்கும் சடலங்கள், அழிக்கப்பட்டப் பேருந்து, வீதிகளின் மத்தியில் எரிந்து கிடக்கும் வானங்கள் என மனதை உலுக்கும் காட்சிகளை காட்டும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர், "அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பது, அயோக்கியர்களால் மட்டுமே இவ்வாறு செயல்பட முடியும். இது கர்த்தர் ஜெருசலத்துக்குள் நுழைந்ததைக் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு அன்று மக்கள் தேவாலையம் செல்லும் நாளில் நடந்துள்ளது.
What's Your Reaction?