தொடர் போராட்டம் எதிரொலி - நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் ஊழலைக் கண்டித்தும் நேற்று தலைநகர் காத்மாண்டுவில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
What's Your Reaction?