ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் தூதரகம் அறிவித்துள்ளது.

Jun 15, 2025 - 18:55
 0  3
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

தெஹ்ரான்: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் இணைப்பு தற்போது ஈரானில் உள்ள இந்திய குடிமக்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்க. https://t.me/indiansiniran” என்று தெரிவித்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow