முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்  யு மும்பா டிடி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின

Jun 15, 2025 - 23:10
 0  2
முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது யு மும்பா | அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6

அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் யு மும்பா டிடி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (4-11, 11-5, 11-7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலாவுடன் மோதினார். இதில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் 2-1 (11-9, 10-11, 11-5) என்ற கணக்கில் ஸ்ரீஜா அகுலாவை தோற்கடித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow