அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை

இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இஸ்​ரேல் தூதரக அதி​காரி​களும், ஊழியர்​களும் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனை​வரும் அருங்​காட்​சி​யகத்தை விட்டு வெளியே வந்​தனர்.

May 23, 2025 - 09:05
 0  4
அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள யூதர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் யூதர்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இஸ்​ரேல் தூதரக அதி​காரி​களும், ஊழியர்​களும் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனை​வரும் அருங்​காட்​சி​யகத்தை விட்டு வெளியே வந்​தனர்.

அப்​போது இஸ்​ரேல் தூதரக அதி​காரி​கள், ஊழியர்​களும் வெளியே வந்து வீட்​டுக்​குச் செல்ல ஆயத்​த​மாகி நின்​றனர். அப்​போது அருங்​காட்​சி​யகத்​துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒரு​வர் தூதரக ஊழியர்​களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்​கி​யால் சுட்​டார். இதில் சம்பவ இடத்​திலேயே இஸ்​ரேலிய தூதரக பெண் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இவர்​கள் இரு​வருமே இஸ்​ரேல் தூதரகத்​தில் பணி​யாற்​றிய ஊழியர்​கள் ஆவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow