இஸ்ரோவில் சேர என்ன படிக்கலாம் | புதியன விரும்பு 2.0 - 11
ஆர்யபட்டா செயற்கைக்கோள் மூலம் 1975இல் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்த இந்திய நாடு, தற்போது உலக அளவில் விண்வெளித் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆர்யபட்டா செயற்கைக்கோள் மூலம் 1975இல் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்த இந்திய நாடு, தற்போது உலக அளவில் விண்வெளித் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்துல் கலாமிலிருந்து மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், கே.சிவன், வி.நாராயணன், கே.அருணன், வளர்மதி, வனிதா, நிகர் ஷாஜி போன்ற தமிழர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனிமுத்திரையைப் பதித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமிக்க, திறமையான மாணவர்களை பிளஸ் டூ படித்த நிலையிலேயே ஈர்க்க வேண்டும் என்பதற் காக இஸ்ரோவின் சார்பில் திருவனந்தபுரம் வலியமலையில் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் (IIST) என்கிற நிகர்நிலைப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது.
What's Your Reaction?