இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட் முதல் மத்திய பட்ஜெட் வரை: சேதி தெரியுமா? @ ஜன.28 - பிப்.3

ஸ்ரீரிகோட்டாவிலிருந்து இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எஃப்-15 மூலம் என்விஎஸ் - 02 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Feb 4, 2025 - 15:45
 0  4
இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட் முதல் மத்திய பட்ஜெட் வரை: சேதி தெரியுமா? @ ஜன.28 - பிப்.3

ஜன.28: காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயமடைந்தனர். ஐவர் உள்பட 13 மீனவர்களை சிறைபிடிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தையடுத்து டெல்லியில் இலங்கை தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

ஜன.28: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரத்தில் சென்னை, மயிலாடுதுறை என தமிழகத்தில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow