இலங்கையில் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை: அதிபர் அனுர குமார திசாநாயக்க உறுதி
பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை" என்று தெரிவித்தார்.

பத்தாவது இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. முதல்நாள் கூட்டத்தில் பேசிய அதிபர் அனுர குமார திசாநாயக்க, “இலங்கையில் இனிமேல் இனவாதம், மதவாதத்துக்கு இடமில்லை" என்று தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் என்பிபி கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கடந்த 18-ம் தேதி இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். அதிபர், பிரதமர் உட்பட 22 பேர் அடங்கிய புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.
What's Your Reaction?