இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் இழந்துவிட்டோம்: ட்ரம்ப் விரக்தி

“இந்​தி​யா​வை​யும், ரஷ்​யா​வை​யும் மோச​மான சீனா​விடம் நாம் இழந்​து​விட்​டது போல் தெரி​கிறது. அந்த நாடு​கள் எதிர்​காலத்​தில் வளமாக இருக்​கட்​டும்” என சமூக ஊடகத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரி​வித்துள்​ளார்.

Sep 6, 2025 - 09:05
 0  3
இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் இழந்துவிட்டோம்: ட்ரம்ப் விரக்தி

வாஷிங்​டன்: “இந்​தி​யா​வை​யும், ரஷ்​யா​வை​யும் மோச​மான சீனா​விடம் நாம் இழந்​து​விட்​டது போல் தெரி​கிறது. அந்த நாடு​கள் எதிர்காலத்​தில் வளமாக இருக்​கட்​டும்” என சமூக ஊடகத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வின் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்​குமதி வரி விதித்​தது. இதனால் இந்​தியா - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்​பட்​டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி​யிடம் இது தொடர்​பாக பேச பல முறை முயன்​ற​தாக​வும், ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்​க​வில்லை எனவும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு (எஸ்​சிஓ) மாநாட்​டில் இந்​திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்​பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நெருக்​க​மாக உரை​யாடினர். இந்த போட்டோ உலகம் முழு​வதும் வைரலாக பரவியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow