நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஃபைட்டர் ஜெட்கள் சூழ ரோமில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி புறப்பட்ட அமெரிக்க விமானம் ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இத்தாலி வான் எல்லைக்குள் வந்த அந்த விமானம் அந்நாட்டின் இரண்டு ஃபைட்டர் ஜெட்கள் சூழ பாதுகாப்பாக ரோமில் தரையிறக்கப்பட்டது.

Feb 24, 2025 - 10:25
 0  3
நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: ஃபைட்டர் ஜெட்கள் சூழ ரோமில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக டெல்லி புறப்பட்ட அமெரிக்க விமானம் ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது. இத்தாலி வான் எல்லைக்குள் வந்த அந்த விமானம் அந்நாட்டின் இரண்டு ஃபைட்டர் ஜெட்கள் சூழ பாதுகாப்பாக ரோமில் தரையிறக்கப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமானம் தரையிறங்கிய பின்னர் நடந்த சோதனையில் அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதியானது.

நடந்தது என்ன? அமெரிக்காவின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிப்.22 அன்று AA292 விமானம் டெல்லி புறப்பட்டது. போயிங் ரக விமானமான அதில் 199 பயணிகளும் பைலட்டுள், விமான சிப்பந்திகள் 15 பேரும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் ரோம் நகர விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட இரண்உ மணி நேரத்திலேயே அது ரோம் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow