இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது - பின்னணி என்ன?

அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.

Aug 23, 2025 - 00:55
 0  3
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது - பின்னணி என்ன?

கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (76) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow