இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.

நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள இதில், தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையின் காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் கூறும்போது, "'கிஸ்' என்ற தலைப்பு முதலில் மிஷ்கின் சாரிடம் இருந்தது. ஆனால், இந்தக் கதைக்கு 'கிஸ்' தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் கேட்டோம். உடனே கொடுத்தார்.
What's Your Reaction?