மேட்ச் ரெப்ஃரீயை நீக்க ஐசிசி மறுப்பு: கடைசி நேரம் வரை மைதானத்துக்கு வரமறுத்த பாகிஸ்தான் அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

Sep 18, 2025 - 05:55
 0  3
மேட்ச் ரெப்ஃரீயை நீக்க ஐசிசி மறுப்பு: கடைசி நேரம் வரை மைதானத்துக்கு வரமறுத்த பாகிஸ்தான் அணி

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த போட்டியில் டாஸின் போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சக அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. மேலும் டாஸ் நிகழ்வின் போது விளையாடும் லெவன் பட்டியலை இரு அணிகளின் கேப்டன்கள் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளாமல் மேட்ச் ரெஃப்ரீயான ஐசிசி பேனலை சேர்ந்த ஆண்டி பைகிராஃப்ட்டிடம் வழங்கினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow