இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கு ‘சர்’ பட்டம்!
திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.

லண்டன்: திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரும் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் மற்றும் அவரது மனைவி எம்மா தாமஸுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கவுரவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சாதனை புரியும் அல்லது நாட்டுக்காக சேவை செய்யும் தனி நபர்களுக்கு இங்கிலாந்து மன்னர் அல்லது ராணியால் ‘சர்’ பட்டம் (நைட்ஹுட்) வழங்கப்படுகிறது. இதைப் பெற்றவர்கள், தங்கள் பெயருக்கு முன்பு ‘திரு’ என்பதற்கு பதில் ‘சர்’ என போட்டுக்கொள்ளலாம். இந்த வகையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனுக்கும், அவரது மனைவிக்கும் ‘சர்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. நோலனின் பெரும்பாலான படங்களுக்கு அவரது மனைவி தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
What's Your Reaction?