இந்தியாவில் இருந்து 5 மாதங்களில் 2 கோடி ஐபோன்கள் ஏற்றுமதி!

இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஒப்பந்த உற்பத்தியாளர்கள் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 2 கோடியே 40 லட்சம் ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளனர். 2024-ம் ஆண்டின் இதே 5 மாத காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 57 சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸின் (ஓம்டியா) புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

Jun 17, 2025 - 17:10
 0  3
இந்தியாவில் இருந்து 5 மாதங்களில் 2 கோடி ஐபோன்கள் ஏற்றுமதி!

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவன ஒப்பந்த உற்பத்தியாளர்கள் 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 2 கோடியே 40 லட்சம் ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளனர். 2024-ம் ஆண்டின் இதே 5 மாத காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 57 சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சி நிறுவனமான கேனலிஸின் (ஓம்டியா) புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன உற்பத்திக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த போதிலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்களில் 77 சதவீதம் அமெரிக்காவுக்குச் சென்றன. மே 2025 நிலவரப்படி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன்கள் 77 சதவீதமாகும். இது 2024-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 54 சதவீதமாக இருந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow