இதயக் காவலர் கே.எம்.செரியன்
சிறுவனாக இருந்தபோதே துடிக்கிற இதயத்தின் மீது எனக்கு இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. அதுவே, பின்னாளில் இறந்த பல்லிகள், தவளைகளின் உடலைப் பகுத்துப் பார்க்கும் ஆர்வத்தை என்னுள் அதிகரித்தது என நினைக்கிறேன்.

“சிறுவனாக இருந்தபோதே துடிக்கிற இதயத்தின் மீது எனக்கு இனம்புரியாத ஈர்ப்பு இருந்தது. அதுவே, பின்னாளில் இறந்த பல்லிகள், தவளைகளின் உடலைப் பகுத்துப் பார்க்கும் ஆர்வத்தை என்னுள் அதிகரித்தது என நினைக்கிறேன். உடற்கூறியலைத் தேர்வு செய்ததற்கான காரணமும் இதுதான்.” - இந்தியாவின் முன்னணி இதய அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவர் கே.எம்.செரியன் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த செய்தி இது.
இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகப் புகழ்மிக்க மருத்துவரான கே.எம்.செரியன் பெங்களூருவில் கடந்த ஜனவரி 25 அன்று காலமானார். அவருக்கு வயது 82. மருத்துவர் செரியனின் இறப்பு மருத்துவ உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?