இங்கிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியிலும் வெற்றி: ஒருநாள் தொடரை வென்றது நியூஸி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

ஹாமில்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், கேப்டன் ஹாரி புரூக் 34 ரன்களும் சேர்த்தனர். ஜேமி ஸ்மித் 13, பென் டக்கெட் 1, ஜோ ரூட் 25, ஜேக்கப் பெத்தேல் 18, ஜாஸ் பட்லர் 9, சேம் கரண் 17, பிரைன் கார்ஸ் 3, ஆதில் ரஷித் 9 ரன்களில் நடையை கட்டினர்.
What's Your Reaction?