ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Sep 3, 2025 - 18:05
 0  2
ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாள்: மீனாட்சியம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 9-ம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் பேச்சியம்மன் படித்துறை அருகிலுள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை முன்னிட்டு கோயிலிலிருந்து காலை 6 மணியளவில் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பட்டனர். நான்கு சித்திரை வீதிகள், கீழ மாசி வீதி, யானைக்கல் வழியாக ஆதி சொக்கநாத கோயில், திருமலை ராயர் படித்துறை, அனுமார்கோயில் படித்துறை, வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பேச்சியம்மன் படித்துறை வழியாக பிட்டுத்தோப்பு மண்டபத்தில் எழுந்தளி, பின்பு வாணிய வைசியர் மண்டபத்தில் எழுந்தருளினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow